Skip to main content

Posts

vellore

(PART - 1) வெயிலுக்கும் ஜெயிலுக்கும் பேர் போனது மட்டுமல்ல வேலூர். சொர்கமே என்றாலும் எங்க வேலூரை போல வருமா? அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து "சிப்பாய் புரட்சி "செய்த ஊர். அறுபத்து நான்காவது நாயன்மார் என அழைக்கப்பட்ட "திருமுருக கிருபானந்த வாரியார் "பிறந்த ஊர் காங்கேயநல்லூர். தந்தை பெரியாரின் துணைவியார் மணியம்மையாரின் சொந்த ஊர். சுதந்திர இந்தியாவின் டெல்லி செங்கோட்டையில் ஏற்றிய தேசியக்கொடியை தயாரித்து தந்த எங்கள் ஊர் குடியாத்தம். கர்மவீரர் காமராஜரை சொந்த மண் விருதுநகர் தோற்கடித்தாலும், அவரை முதன்முதலில் வெற்றி பெற வைத்து அழகு பார்த்த குடியாத்தம். விக்டோரியா மகாராணிக்கு பிரசவம் பார்த்த எங்கள் ஆற்காடு லட்சுமணசாமி முதலியார். தமிழ்நாட்டின் முதல் நகராட்சியாக அறிவிக்கப்பட்ட வாலாஜாப்பேட்டை. இந்தியாவின் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் படித்த வேலூர் ஊரிசு கல்லூரி. புகழ்பெற்ற ராஜாளி கப்பல்படை விமானதளம் உள்ள அரக்கோணம். ஆசியாவின் மிகப்பெரிய வான் தொலைநோக்கி உள்ள ஆலாங்காயம் அடுத்த காவனூர். திருக்குறள் தெளிவுரை தந்த டாக்டர்.மு.வரதராசனாரை தந்த வாலாஜாப்பேட்டை

எது முக்கியம்? Important things in life

எது முக்கியம்? ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள்.  கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால்  அதுல பதிலை எழுதுங்க.  ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது.  உங்களால முடியலேன்னா  அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா….  படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய  உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா?  இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ  அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவி