Skip to main content

Posts

Showing posts from September 18, 2017

TREATMENT FOR SUGAR BP AND GOOD HEALTHY LIFE

இத்தனை ஆண்டுகளில் நோயில் படுத்தவனில்லை. சிறு அறுவை சிகிச்சை கூட இல்லை. பதினைந்து நாட்களுக்கு முன் அடிவயிற்றில் கடும் வலி! பெங்களுரில் தவிர்க்க முடியாத திருமணங்கள். போய் விட்டேன் வலி அதிகமாயிற்று! உடனே மருத்துவமனைக்கு சென்று காண்பிக்க ஸ்கேனில் சிறுநீரகக் கட்டி என்று வந்தது. "உடனே அறுவை சிகிச்சை செய்யா விடில் உயிருக்கே ஆபத்து என்ற எச்சரிக்கை!" நான் மறுத்துவிட்டு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு சென்னையில் என் குடும்ப டாக்டரிடம் காண்பிக்க அவரும் உறுதிப்படுத்தினார்... என் மகன் அமெரிக்காவில் இருந்து உடனே வருவதாக தகவல் அனுப்பினான்... என் மனைவி எத்தனை லட்சம் செலவானாலும் சரி என்று கதற ஆரம்பித்து விட்டாள்... கையமர்த்திய டாக்டர், "முதலில் பதினைந்து நாட்களுக்கு ஒரு மருந்து தருகிறேன் அதில் குணம் தெரியாவிட்டால் அறுவை சிகிச்சை செய்யலாம்" என்றார். அவர் கொடுத்த மருந்து நான்கு நாட்களில் வேலை செய்ய ஆரம்பித்தது. நேற்றோடு வலி போய்விட்டது... டாக்டர் மீண்டும் ஸ்கேன் எடுத்துப் பார்க்க கட்டியும் போய்விட்டது... எனக்கு ஆச்சரியம்… "உங்களுக்கு குணமாகி விட்டது" என்றார்...