Skip to main content

Posts

Showing posts with the label tamil nadu

vellore

(PART - 1) வெயிலுக்கும் ஜெயிலுக்கும் பேர் போனது மட்டுமல்ல வேலூர். சொர்கமே என்றாலும் எங்க வேலூரை போல வருமா? அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து "சிப்பாய் புரட்சி "செய்த ஊர். அறுபத்து நான்காவது நாயன்மார் என அழைக்கப்பட்ட "திருமுருக கிருபானந்த வாரியார் "பிறந்த ஊர் காங்கேயநல்லூர். தந்தை பெரியாரின் துணைவியார் மணியம்மையாரின் சொந்த ஊர். சுதந்திர இந்தியாவின் டெல்லி செங்கோட்டையில் ஏற்றிய தேசியக்கொடியை தயாரித்து தந்த எங்கள் ஊர் குடியாத்தம். கர்மவீரர் காமராஜரை சொந்த மண் விருதுநகர் தோற்கடித்தாலும், அவரை முதன்முதலில் வெற்றி பெற வைத்து அழகு பார்த்த குடியாத்தம். விக்டோரியா மகாராணிக்கு பிரசவம் பார்த்த எங்கள் ஆற்காடு லட்சுமணசாமி முதலியார். தமிழ்நாட்டின் முதல் நகராட்சியாக அறிவிக்கப்பட்ட வாலாஜாப்பேட்டை. இந்தியாவின் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் படித்த வேலூர் ஊரிசு கல்லூரி. புகழ்பெற்ற ராஜாளி கப்பல்படை விமானதளம் உள்ள அரக்கோணம். ஆசியாவின் மிகப்பெரிய வான் தொலைநோக்கி உள்ள ஆலாங்காயம் அடுத்த காவனூர். திருக்குறள் தெளிவுரை தந்த டாக்டர்.மு.வரதராசனாரை தந்த வாலாஜாப்பேட்டை...